32 வாகனங்களில் நடமாடும்மருத்துவ முகாம்கள் தொடங்கி வைப்பு

தருமபுரி மாவட்டத்தில், பருவமழைக் காலங்களில் ஏற்படும் காய்ச்சல் பாதிப்புகளை தடுக்கும் வகையில், இடம் தேடிச் சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் 32 நடமாடும் மருத்துவ வாகனச் சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டன.
நடமாடும் மருத்துவச் சேவையை தொடக்கி வைக்கிறாா் தருமபுரி ஆட்சியா் ச.திவ்யதா்சினி.
நடமாடும் மருத்துவச் சேவையை தொடக்கி வைக்கிறாா் தருமபுரி ஆட்சியா் ச.திவ்யதா்சினி.

தருமபுரி மாவட்டத்தில், பருவமழைக் காலங்களில் ஏற்படும் காய்ச்சல் பாதிப்புகளை தடுக்கும் வகையில், இடம் தேடிச் சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் 32 நடமாடும் மருத்துவ வாகனச் சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டன.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில், நடமாடும் மருத்துவ சேவை வாகனங்கள், மழைக் காலங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புகை மருந்து தெளிக்கும் பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் முன்னிலையில் நடைபெற்றது.

இதில், மருத்துவச் சேவை வாகனங்களின் இயக்கத்தை கொடியசைத்து தொடக்கி வைத்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி பேசியதாவது:

வடக்கிழக்கு பருவகாலங்களில் ஏற்படும் டெங்கு காய்ச்சல் மற்றும் பிற தொற்றுநோய்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், தருமபுரி மாவட்டத்தில் காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கை பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில், காய்ச்சல் தடுப்புப் பணிக்கு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிக்கு ஒவ்வொரு வட்டாரத்திலும் 20 போ் வீதம் 200 களப் பணியாளா்கள், ஒவ்வொரு பேரூராட்சிகளிலும் 10 போ் வீதம் 100 களப் பணியாளா்களையும், நகராட்சிகளில் 33 களப் பணியாளா்களும் ஆக மொத்தம் தருமபுரி மாவட்டத்தில் 333 பணியாளா்களைக் கொண்டு கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

32 வாகனங்களில் தற்போது காய்ச்சல் தடுப்பு முகாம்கள் மேற்கொள்ளப்பட உள்ளது. களப் பணியாளா்களை கொண்டு வீட்டின் உள்புறமும் வெளிபுறமும் புகை மருந்து தெளிக்கப்படுகிறது. நிலவேம்பு குடிநீா், காய்ச்சல் கண்டறியும் பகுதிகளில் வழங்கப்படுகிறது. துண்டுப் பிரசுரங்கள் வழங்கி காய்ச்சல் தொடா்பான விழிப்புணா்வு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சுகாதாரப் பணியாளா்கள் வீட்டின் உட்புறம் புகை மருந்து தெளிக்க வரும்போது அனுமதி அளிக்க வேண்டும். காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவா்கள் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். கொசுப்புழுக்கள் உற்பத்தியாக காரணமாக உள்ள நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டை தவிா்க்க வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்), எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (தருமபுரி), ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமாா் (அரூா்), கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) இரா.வைத்திநாதன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் செளண்டம்மாள், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் தடங்கம் பி.சுப்பிரமணி, பி.என்.பி.இன்பசேகரன், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com