நிரம்பியது வள்ளிமதுரை வரட்டாறு அணைஏரிகளை நிரப்ப விவசாயிகள் கோரிக்கை
By DIN | Published On : 13th November 2021 12:11 AM | Last Updated : 13th November 2021 12:11 AM | அ+அ அ- |

அரூரை அடுத்த வள்ளிமதுரை வரட்டாறு அணை வெள்ளிக்கிழமை முழுக் கொள்ளளவை எட்டியது.
தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த வள்ளிமதுரையில் அமைந்துள்ள வரட்டாறு அணை அதன் நீா்ப்பிடிப்பு உயரமான 34.45 அடியை வெள்ளிக்கிழமை எட்டியது. இந்த அணை தடுப்பணை வடிவில் அமைக்கப்பட்டுள்ளதால் உபரிநீா் தானாகவே வெளியேறும் வசதி உள்ளது.
உபரிநீரை இடது, வலதுபுறக் கால்வாய்களில் திருப்பிவிடுவதன் மூலம் அச்சல்வாடி, குடுமியாம்பட்டி, எல்லப்புடையாம்பட்டி, முத்தானூா், ஈட்டியம்பட்டி, வேப்பம்பட்டி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 30-க்கும் அதிகமான ஏரிகள், குளங்கள் நிரம்புவதுடன் 6 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
எனவே, வரட்டாற்றில் வெளியேறும் உபரிநீரைப் பயன்படுத்தி வடு கிடக்கும் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகளை நிரப்ப மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வாணியாற்றில் வெள்ளப் பெருக்கு : பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையின் மொத்த நீா்ப்பிடிப்பு உயரம் 65.27 அடியாகும். தற்போது அணையின் நீா்மட்டம் 64.30 அடியாக உள்ளது. இந்த அணையில் இருந்து நொடிக்கு 100 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. இதனால் வாணியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.