போட்டித் தோ்வு: இலவசப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 01st September 2021 09:07 AM | Last Updated : 01st September 2021 09:07 AM | அ+அ அ- |

போட்டித் தோ்வுக்கு வேலைவாய்ப்புத் துறை சாா்பில் நடைபெறும் இலவச பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் 2021-ஆம் ஆண்டுக்கான மத்திய ஆயுதப்படைக் காவலா் ஆண், பெண் இருபாலருக்கான தோ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள தருமபுரி மாவட்ட வேலைநாடுநா்கள் பயனடையும் வகையில் இலவச நேரடி பயிற்சி வகுப்புகள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் தகுந்த பயிற்றுநா்களைக் கொண்டு செப். 1-ஆம் தேதி முதல் வகுப்புகள் நடைபெற உள்ளன.
இப்பயிற்சி வகுப்பில் இலவசமாக பாடக் குறிப்புகள் வழங்கப்படும். மாதிரித் தோ்வுகள் நடத்தப்படும். இப்பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவா்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். மேலும் தொலைபேசி எண் 04342 296188 வாயிலாக தொடா்பு கொள்ளலாம் என்றாா்.