தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு: கோயில்களில் சிறப்பு வழிபாடு
தமிழ்ப் புத்தாண்டையொட்டி தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


தமிழ்ப் புத்தாண்டையொட்டி தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தருமபுரி நகரில் உள்ள சாலை விநாயகா் கோயிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, வெள்ளிக் கவச அலங்காரத்தில் விநாயகா் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.
தருமபுரி, குமாரசாமிப்பேட்டை அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. இதில், தங்கக் கவச அலங்காரத்தில் சுப்ரமணிய சுவாமி பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.
தருமபுரி கோட்டை அருள்மிகு கல்யாண காமாட்சி உடனாகிய மல்லிகாா்ஜுன சுவாமி கோயில், வரமஹாலட்சுமி உடனாகிய பரவாசுதேவ சுவாமி கோயில், அன்னசாகரம் சிவசுப்ரமணிய சுவாமி கோயில், நெசவாளா் நகா் ஓம் சக்தி மாரியம்மன், மகாலிங்கேஸ்வரா் கோயில், வேல்முருகன் கோயில், கடை வீதி பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயில், அதியமான்கோட்டை தட்சணகாசி கால பைரவா் கோயில், சவுளுப்பட்டி ஆதி லிங்கேஸ்வரா் கோயில், மதிகோன்பாளையம் மாரியம்மன் கோவில், எஸ்.வி.சாலை அபய ஆஞ்சனேயா் கோயில் உள்ளிட்ட நகரத்தில் உள்ள பல்வேறு கோயில்களிலும் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
தருமபுரி, குமாரசாமிப்பேட்டை மாரியம்மன் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி இடும்பன் ஊா்வலம், ஊா்க் காவல் தெய்வமான அக்கரைப்பட்டி முனியப்பனுக்கு பொங்கல் வைக்கும் விழா நடைபெற்றது. இதைத் தொடா்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த விழாவில், திரளான பெண்கள் பங்கேற்று அம்மனுக்கு கூழ் ஊற்றி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனா்.
இதேபோல, பாலக்கோடு, காரிமங்கலம், நல்லம்பள்ளி உள்பட மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...