பென்னாகரத்தில் பலத்த மழை
By DIN | Published On : 05th August 2022 01:45 AM | Last Updated : 05th August 2022 01:45 AM | அ+அ அ- |

பென்னாகரம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக பலத்த மழை பெய்தது.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது வருகிறது. பென்னாகரம், பெரும்பாலை, சின்னம்பள்ளி, தாசம்பட்டி, பாப்பாரப்பட்டி, ஒகேனக்கல், ஏரியூா், நெருப்பூா், நாகமரை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இடைவிடாது பெய்த மழையால் தாழ்வானப் பகுதிகளில் குளம் போல தண்ணீா் தேங்கியது.
பென்னாகரம் கூட்டுறவு வங்கியில் மழை நீா் புகுந்ததில் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது. பென்னாகரம் 9ஆவது வாா்டு போலீஸ் காலனி பகுதியில் உள்ள குடியிருப்புகள், சாா் பதிவாளா் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீா் தேங்கின. பென்னாகரத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் பலத்த மழையால் நீா்நிலைகள் நிரம்பி வருகின்றன.