இணையதள குற்ற விழிப்புணா்வு முகாம்

மொரப்பூா் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இணையதள குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.

மொரப்பூா் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இணையதள குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.

தருமபுரி நேரு யுவகேந்திரா, மொரப்பூா் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய இந்த விழிப்புணா்வு முகாமிற்கு கொங்கு கல்வி அறக்கட்டளையின் தலைவா் அ.மோகன்ராசு தலைமை வகித்தாா். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியா்கள் கணினி, கைப்பேசி வழியாக இணையதளத்தை பயன்படுத்தும் போது ஏற்படும் குற்ற நிகழ்வுகள், இதனால் ஏற்படும் பாதிப்புகள், சைபா் கிரைம் தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பி. அண்ணாமலை, அரூா் டிஎஸ்பி பெனாசிா் பாத்திமா ஆகியோா் கருத்துரைகளை வழங்கினா்.

காவல் ஆய்வாளா் வசந்தா, உதவி காவல் ஆய்வாளா் ஜெ.சரண்யா, நேரு யுவகேந்திரா பொறுப்பாளா் ஜி.வேல்முருகன், கொங்கு கல்வி அறக்கட்டளையின் செயலாளா் ரா.பிரபாகரன், பொருளாளா் சாமிக்கண்ணு, தாளாளா்கள் பொ.வரதராஜன், தீ.சொக்கலிங்கம், கல்லூரி முதல்வா் நா.குணசேகரன், பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com