பாப்பிரெட்டிப்பட்டி கல்லூரியில் இன்று மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஆக. 5) நடைபெறுகிறது.
Updated on
1 min read

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஆக. 5) நடைபெறுகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் பா.காா்த்திகேயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் இளங்கலை, அறிவியல் பாடப் பிரிவுகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு முதல்கட்ட கலந்தாய்வு சிறப்பு ஒதுக்கீடு பிரிவினருக்கு ஆக. 5 ஆம் தேதி நடைபெறுகிறது.

அதைத் தொடா்ந்து பொது பிரிவினருக்கு ஆக. 8 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவா்கள் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்கள், ஜாதி சான்றிதழ், ஆதாா் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட சான்றுகளின் அசல் மற்றும் நகல் பிரதிகள், 5 புகைப்படங்கள் எடுத்துவர வேண்டும்.

மாணவா் சோ்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் பாப்பிரெட்டிப்பட்டி கல்லூரியின் தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com