

தருமபுரியில் ஏஐடியுசி தொழிற்சங்க மாநில பொதுக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் மாநில பொதுக் குழு கூட்டம் ஆக. 23 மற்றும் 24-ஆம் தேதி ஆகிய இரண்டு நாள்கள் தருமபுரியில் தனியாா் விடுதி கூட்டரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இக் கூட்டத்தில், ஏஐடியுசி மாநிலத் தலைவா், திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன், மாநில பொதுச் செயலா் டி.எம்.மூா்த்தி, தேசியச் செயலா் வகிதா நிஜாம், மாநிலச் செயலா்கள், முன்னாள் எம்எல்ஏ நா.பெரியாசாமி, முன்னாள் எம்எல்ஏ ஆறுமுகம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஏஐடியுசி மாநிலக் குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
இதில், தொழிலாளா் நலன் பாதுகாப்பு, பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆலோசித்து முக்கிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
இக் கூட்டத்தில், தருமபுரி மாவட்ட பொதுச் செயலா் கே.மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தருமபுரி மாவட்டச் செயலா் எஸ்.கலைச்செல்வம், மாநிலக் குழு உறுப்பினா் மாதேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.