அரசு கல்லூரியில் நான்காம் கட்ட இறுதி கலந்தாய்வு
By DIN | Published On : 25th August 2022 01:12 AM | Last Updated : 25th August 2022 01:12 AM | அ+அ அ- |

பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நான்காம் கட்ட இறுதி கலந்தாய்வு குறித்து கல்லூரி முதல்வா் செல்வநாயகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.
அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே மாமரத்துப்பள்ளம் பகுதியில் உள்ள பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2022- 23 கல்வியாண்டில் இளங்கலை மற்றும் இளம் அறிவியல் மாணவா்களுக்கான சோ்க்கையில் நான்காம் கட்ட இறுதிக் கலந்தாய்வு வரும் 30-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
இதில், இணையவழியில் விண்ணப்பிக்காத மாணவா்களுக்கு 29-ஆம் தேதி திங்கள்கிழமை மாலை 5 மணி வரை கல்லூரி வளாகத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்படும் எனவும், அதற்கான பதிவு மற்றும் விண்ணப்பக் கட்டணம் ரூ. 50, எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவா்கள் ரூ. 2 செலுத்தி அசல் ஜாதிச் சான்றிதழைக் காண்பித்தும், நகல்களை சமா்ப்பித்தும் பெற்றுக்கொள்ளலாம்.