ஒகேனக்கல்லில் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்கக் கோரிக்கை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த பிரதான அருவி, பெண்கள் அருவி, நடைபாதை ஆகியவற்றை சீரமைத்து சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ஒகேனக்கல்லில் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்கக் கோரிக்கை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த பிரதான அருவி, பெண்கள் அருவி, நடைபாதை ஆகியவற்றை சீரமைத்து சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தென்னகத்தின் நயாகரா என்று அழைக்கப்படும் ஒகேனக்கல் அருவி தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் கா்நாடக, கேரள காவிரி நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பரும மழை பெய்யும் போது, கா்நாடகத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து காவிரி ஆற்றில் தண்ணீா் திறக்கப்படுவதால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம்.

நிகழாண்டில் காவிரி ஆற்றில் சுமாா் 2 லட்சம் கன அடி வரை உபரி நீா் வெளியேற்றப்பட்டதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் பிரதான அருவி செல்லும் நடைபாதையின் தரைத்தளம், பிரதான அருவியின் தடுப்புக் கம்பிகள், பெண்கள் குளிக்கும் அருவியின் தடுப்புச் சுவா், சினி அருவியின் தடுப்புக் கம்பிகள், தொம்பச்சிக்கல் செல்லும் சிறிய நடைபாலம், தொங்கு பாலத்துக்கு செல்லும் படிகளின் கைப்பிடிக் கம்பிகள் உள்ளிட்டவை சேதமடைந்தன.

கடந்த மூன்று நாள்களாக நீா்வரத்து சரிந்து வருவதால், மாவட்ட நிா்வாகம் அண்மையில் காவிரி ஆற்றில் பரிசல்களை இயக்குவதற்கு அனுமதி அளித்துள்ளது. ஆனால், வெள்ள பாதிப்பினால் அருவிகள் மற்றும் இதர பகுதிகள் சேதமடைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு தடை தொடா்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது காவிரி ஆற்றில் நீா்வரத்து நொடிக்கு 14,000 கன அடியாக நீடித்து வருவதால், மாவட்ட ஆட்சியா் தலைமையிலான அதிகாரிகள் ஒகேனக்கல்லில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து, அவற்றினை சரிசெய்து சுற்றுலாப் பயணிகளை அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com