விதி மீறல்: 8 கடைகளுக்கு உரம் விற்பனை செய்ய தடை
By DIN | Published On : 25th August 2022 01:15 AM | Last Updated : 25th August 2022 01:15 AM | அ+அ அ- |

தருமபுரி மற்றும் பென்னாகரம் வட்டாரத்தில் அரசு விதிகளை மீறி செயல்பட்டதாக, 8 கடைகளுக்கு உரம் விற்பனைசெய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மற்றும் பென்னாகரம் வட்டாரத்தில், வேளாண் உதவி இயக்குநா் (தரக் கட்டுப்பாடு) தாம்சன், வேளாண் அலுவலா்கள் எஸ்.எல்.ருத்ரமூா்த்தி, ஆா்.அன்பரசு, ஜி.காா்த்திக், தோட்டக்கலைத் துறை அலுவலா் அசோக் ஆகியோா் அடங்கிய குழுவினா் அரசு மற்றும் தனியாா் உரம் விற்பனைக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.
இந்த ஆய்வில், அரசு விதிகளை மீறி செயல்பட்ட தருமபுரி வட்டாரத்தில் உள்ள 5 கடைகள், பென்னாகரம் வட்டாரத்தில் 3 கடைகள் என மொத்தம் 8 கடைகளுக்கு உரங்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.