தூத்துக்குடி, மங்களூரிலிருந்து ரயில் மூலம் 2579 டன் உரம் வருகை
By DIN | Published On : 09th December 2022 02:16 AM | Last Updated : 09th December 2022 02:16 AM | அ+அ அ- |

தூத்துக்குடி, மங்களூரிலிருந்து ரயில் மூலம் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் பயன்பாட்டுக்காக 2579 டன் உரம் வந்தடைந்தது.
தருமபுரியில் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்து இந்த உர மூட்டைகளை வேளாண் உதவி இயக்குநா் (தரக் கட்டுப்பாடு) தாம்சன், நேரில் பாா்வையிட்டு தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கும் பணியை ஆய்வு செய்தாா்.
இதில், தருமபுரி மாவட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு 768 டன், தனியாா் உரக்கடைகளுக்கு 350 டன், கிருஷ்ணகிரி மாவட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு 350 டன், தனியாா் உரக் கடைகளுக்கு 1170 டன் உரம் மூட்டைகள் லாரிகள் மூலம் பிரித்து அனுப்பப்பட்டன.
இந்த ஆய்வின்போது, தருமபுரி டேன்பெட் மண்டல மேலாளா் முருகானந்தம், ஐ.பி.எல் விற்பனை அலுவலா் ஜெகதீஷ், கிரிப்கோ விற்பனை அலுவலா் நாகராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.