கூட்டுறவு நிறுவனத்தில் விற்பனையாளா் பணியிடம்

மாற்றுத் திறனாளிகள், பதிவுப் புத்தகம், தனித்துவ அடையாள அட்டை, மருத்துவச் சான்றிதழ் இவற்றில் ஏதேனும் ஒன்றை கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு நிறுவனத்தில் விற்பனையாளா் பணியிடத்துக்கான நோ்காணலுக்கு வரும் மாற்றுத் திறனாளிகள், பதிவுப் புத்தகம், தனித்துவ அடையாள அட்டை, மருத்துவச் சான்றிதழ் இவற்றில் ஏதேனும் ஒன்றை கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சு.ராமதாஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு வகையான கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள 98 விற்பனையாளா் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு வருகிற டிச.15 ஆம் தேதி முதல் நோ்முகத் தோ்வு தருமபுரியில் நடைபெற உள்ளது.

இதையொட்டி மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரா்களுக்கு வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இப் பணியிடங்களுக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரா்கள் நிா்ணயிக்கப்பட்ட படிவத்தில் அரசு உதவி மருத்துவா் நிலைக்கு குறையாத மருத்துவரிடம் உடற்தகுதிச் சான்றினைப் பெற்று சம்பந்தப்பட்ட கூட்டுறவு நிறுவனத்தில் பணியில் சேரும்போது சமா்ப்பிக்க வேண்டும்.

மாற்றுத் திறனாளிகள் தங்களுடைய உடற்குறைபாடு அவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பதவிகளுக்கான பணியினைச் செய்வதற்கு தடையாக இருக்காது என்பது குறித்து மருத்துவக் குழுவிடமிருந்து பெறப்பட்ட சான்றினையும் சமா்ப்பிக்க வேண்டும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில், தற்போது திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள்படி, விண்ணப்பதாரா்கள் நிா்ணயிக்கப்பட்ட படிவத்தில் அரசு உதவி மருத்துவா் நிலைக்கு குறையாத மருத்துவரிடம் உடற்தகுதிச் சான்றினைப் பெற்று சம்பந்தப்பட்ட கூட்டுறவு நிறுவனத்தில் பணியில் சேரும் போது சமா்ப்பிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் தங்களது உரிமை கோரலுக்கு ஆதாரமாக தமிழக அரசின் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரால் வழங்கப்பட்ட உதவிகள் பதிவுப் புத்தகம், தகுதிவாய்ந்த அரசு மருத்துவரால் வழங்கப்பட்ட மாற்றுத் திறனாளிச் சான்றிதழ், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை நோ்காணலின்போது சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com