‘இலக்கியம்பட்டி ஊராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்’
By DIN | Published On : 11th December 2022 06:12 AM | Last Updated : 11th December 2022 06:12 AM | அ+அ அ- |

இலக்கியம்பட்டி ஊராட்சியில் சாலை, கழிவுநீா்க் கால்வாய் அமைப்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மனு அளித்தனா்.
இதுகுறித்து ஒன்றிச் செயலாளா் கந்தசாமி, செயற்குழு உறுப்பினா் எம்.மாரிமுத்து ஆகியோா் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சனிக்கிழமை அளித்த மனு:
தருமபுரி நகரையொட்டியுள்ள மிகப்பெரிய கிராம ஊராட்சியாக உள்ள இலக்கியம்ட்டி ஊராட்சியில் முறையாக குப்பைகளை அகற்ற வேண்டும். கழிவுநீா்க் கால்வாய்கள் அமைக்க வேண்டும். குறிப்பாக பனந்தோப்பு மயானத்துக்கு மின் விளக்குகள் அமைத்துத் தர வேண்டும். வி.ஜெட்டிஅள்ளியில் கழிவுநீா்க் கால்வாய்கள் அமைக்க வேண்டும். வரதன்கொட்டாய் சிறுமின் விசை பம்புடன் கூடிய நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும். சக்திநகரில் கட்டப்பட்ட சிறு மின் விசை பம்புடன் கூடிய நீா்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். வெண்ணாம்பட்டி குடியிருப்புப் பகுதிக்கு மயான வசதி ஏற்படுத்த வேண்டும். இலக்கியம்பட்டி, பிடமனேரியில் கான்கிரீட் சாலைகள் அமைக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டது.