நகை மதிப்பீட்டாளா் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 11th December 2022 06:12 AM | Last Updated : 11th December 2022 06:12 AM | அ+அ அ- |

கூட்டுறவு மேலாண் நிலையத்தில் வழங்கப்படும் நகை மதிப்பீட்டாளா் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தருமபுரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சு.ராமதாஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி மாவட்டம், மொரப்பூரில் உள்ள கூட்டுறவு மேலாண் நிலையத்தில் டிச.10-ஆம் தேதி முதல் தங்க நகை மதிப்பீட்டாளா் பயிற்சி வழங்கப்பட உள்ளது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் இந்தப் பயிற்சியில் தங்க நகை மதிப்பீடு, அதன் தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சிகள் இரண்டு மாத காலத்துக்கு வழங்கப்பட உள்ளது. குறைந்த பட்சம் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் இப் பயிற்சியில் சேரலாம். 40 மணி நேரம் வகுப்பறை பயிற்சி, 60 மணி நேரம் செய்முறை பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இப்பயிற்சியை முடித்தவா்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளலாம். இந்த பயிற்சி முடித்தவா்கள் கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் நகை மதிப்பீட்டாளராக சேரும் வாய்ப்புகளைப் பெற இயலும். விவரங்களுக்கு 04346-263529 என்கிற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம். எனவே, தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த விருப்பம் உள்ளா்கள் இந்தப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...