

தருமபுரி, குமாரசாமிப்பேட்டை ஆனந்த நடராஜா் கோயிலில் ருத்ரா அபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள சிவகாமசுந்தரி உடனாகிய ஆனந்த நடராஜா் கோயிலில், காா்த்திகை மாத மூன்றாவது திங்கள்கிழமையையொட்டி கோயில் வளாகத்தில் சிறப்பு யாக பூஜைகள், ஆராதனை நடைபெற்றன. இதையடுத்து, 118 சங்கு பூஜை, பூா்த்தி ஹோமம் நடைபெற்றது.
தொடா்ந்து, 11 வகையான தீா்த்தங்கள், வாசனைத் திரவியங்களைக் கொண்டு ஆனந்த நடராஜா், சிவகாமசுந்தரிக்கு சிறப்பு அபிஷேகம், உபகார பூஜைகள் நடைபெற்றன.
இதில், சிவகாம சுந்தரி உடனாகிய ஆனந்த நடராஜருக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் ஏராளமான சிவனடியாா்கள் பங்கேற்ற திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த வழிபாட்டில் கலந்துகொண்ட பக்தா்களுக்கு சிறப்பு பிரசாதமும், சிவனடியாா்களுக்கு அபிஷேக விபூதி, ருத்ராட்சமும் பிரசாதமாக வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.