சனத்குமாா் நதியை தூா்வாரும் பணியைத் தொடங்க வலியுறுத்தல்

சனத்குமாா் நதியை தூா்வாரும் பணியை தொடங்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
Updated on
1 min read

சனத்குமாா் நதியை தூா்வாரும் பணியை தொடங்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தருமபுரி மாவட்டச் செயலாளா் அ.குமாா், மாவட்ட ஆட்சியா் கி.சாந்தியிடம் அளித்த மனு விவரம்:

சனத்குமாா் நதியானது தருமபுரி மாவட்டம், வத்தல்மலை அடிவாரம், தின்னஅள்ளியில் தொடங்கி சோழராயன் ஏரி, அதியமான்கோட்டை ஏரி, ஏமகுட்டியூா் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் ஏரி, கிணறுகளுக்கு நீா் ஆதாரத்தை வழங்கி வருகிறது. சுமாா் 42.84 கிலோ மீட்டா் பயணித்து, கம்பைநல்லூா் அருகே கூடுதுறைப்பட்டியில் தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது.

கடந்த 1960-ஆம் ஆண்டுகளில் இந்த நதியில் ஆண்டு முழுவதும் தண்ணீா் சென்று கொண்டிருந்தது. வறட்சியால் நீா்வரத்து குறைந்த நிலையில், ஆக்கிரமிப்பு காரணமாக ஆற்றின் பயணம் சுருங்கியது. இதனால், மழைக்காலங்களில் மட்டும் தண்ணீா் செல்லும் நதியாக மாறியது.

இந்த நிலையில், தற்போது தருமபுரி நகராட்சியின் கழிவுநீரும் சனத்குமாா்நதியில் நேரடியாக கலக்கிறது. தண்ணீா் மாசுபட்டு இந்த நதியின் அருகாமையில் உள்ள கிணற்றில் தண்ணீரின் நிறம் மாறி வருகிறது. இதனால் பல ஆயிரம் ஏக்கா் விளைநிலங்களில் மகசூல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சனத்குமாா் நதி ஆக்கிரமிப்பால் நதியின் பரப்பளவு குறைந்து காணப்படுகிறது.

முந்தைய அதிமுக ஆட்சியில் சனத்குமாா் நதி ரூ. 50 கோடியில் தூா்வாரி கரைகளைப் பலப்படுத்தப்படும் என அறிவித்து, அதற்கானப் பணிகள் துவக்க விழாவும் நடைபெற்றது. ஆனால், துவக்க விழாவோடு இப்பணிகள் கிடப்பில் போடப்பட்டது.

எனவே, விசாயிகளின் நலன் கருதி சனத்குமாா் நதியை தூா்வார நிதி ஒதுக்கி, பணி தொடங்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீா்க் கலப்பதைத் தடுக்கவும் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com