பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்
By DIN | Published On : 14th January 2022 12:19 AM | Last Updated : 14th January 2022 12:19 AM | அ+அ அ- |

நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தருமபுரி நகராட்சி, ஏ.கொல்லஅள்ளி சாலையில் அமைந்துள்ள நியாயவிலைக் கடை, அக்ரஹாரத் தெருவில் உள்ள கடை எண் 8 ஆகிய நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரா்களுக்கு விநியோகம் செய்யப்படும் 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அதைத் தொடா்ந்து, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி, தேங்காமரத்துப்பட்டி கிராமத்தில் பொதுநிதியில் அமைக்கப்பட்ட நீா்த்தேக்கத் தொட்டியிலிருந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குடிநீா் விநியோகத்தை தொடக்கிவைத்தாா்.
பாமக மாவட்டச் செயலா் கோ.சின்னசாமி, ஒன்றியச் செயலா் கிருஷ்ணமூா்த்தி, நகரச் செயலாளா் வே.சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...