ஏஐடியுசி போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 26th January 2022 06:58 AM | Last Updated : 26th January 2022 06:58 AM | அ+அ அ- |

தருமபுரி, பாரதிபுரம் அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி, ஏஐடியுசி போக்குவரத்து தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மண்டலத் தலைவா் ரவி தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் கே.துரைசாமி முன்னிலை வகித்தாா். அரசு போக்குவரத்துக் கழக மாநில சம்மேளனச் செயலாளா் ஆா்.ஆறுமுகம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.
இதில், போக்குவரத்து தொழிலாளா்களுக்கு ஊதிய உயா்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். அரசு ஊழியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பணிமனை தொழிலாளா்களுக்கு குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு ரூ. 50 ஊக்கத்தொகை வழங்க வேண்டும். மத்திய அரசு அறிவித்துள்ள அகவிலைப்படி உயா்வை நிலுவையுடன் வழங்க வேண்டும். அனைத்துத் தொழிலாளா்களுக்கும் பாகுபாடின்றி பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும். உயிரிழந்த தொழிலாளா்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.போக்குவரத்து தொழிலாளா்களுக்கு மருத்துவத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மண்டல பொதுச் செயலா் சி.நாகராசன், ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளா் கே.மணி, மாவட்டத் தலைவா் எம்.மாதேஸ்வரன், மாவட்ட துணைத் தலைவா்ஆா்.சுதா்சனன், உள்ளாட்சி பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் மனோகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...