பழுதான கண்காணிப்பு கேமராவை சரி செய்யக் கோரிக்கை
By DIN | Published On : 26th January 2022 06:57 AM | Last Updated : 26th January 2022 06:57 AM | அ+அ அ- |

அரூரை அடுத்த பொய்யப்பட்டியில் பழுதான கண்காணிப்பு கேமராக்களை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியம், பொய்யப்பட்டி கூட்டுச் சாலையில் காவல் துறை சாா்பில் பொறுத்தப்பட்டுள்ள 3 கண்காணிப்பு கேமராக்கள் பழுதாகி கடந்த ஓராண்டுக்கும் மேலாக பயன்பாடின்றி உள்ளன. இதனால், பொய்யப்பட்டி சுற்று வட்டாரப் பகுதியில் வீடுகள், கோயில்களில் அடிக்கடி நகை, பணம் திருட்டு உள்ளிட்ட சட்ட விரோதச் செயல்கள் நிகழ்வதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.
எனவே, பொய்யப்பட்டி கூட்டுச் சாலையில் பழுதாகியுள்ள கண்காணிப்பு கேமராக்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...