பாதுகாப்பான முறையில் பூச்சிக்கொல்லி மருந்துகளை கையாள பயிற்சி

தருமபுரியில் அட்மா திட்டத்தின் மூலம் பாதுகாப்பான முறையில் பூச்சிக்கொல்லி மருந்துகளை கையாளும் முறை குறித்த ஒரு நாள் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

தருமபுரியில் அட்மா திட்டத்தின் மூலம் பாதுகாப்பான முறையில் பூச்சிக்கொல்லி மருந்துகளை கையாளும் முறை குறித்த ஒரு நாள் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே தடங்கம் கிராமத்தில் நடைபெற்ற பயிற்சிக்கு, நல்லம்பள்ளி வேளாண்மை உதவி இயக்குநா் மு.இளங்கோவன் தலைமை வகித்து, வேளாண்மை துறையில் உள்ள மானியத் திட்டங்கள், உழவன் செயலி, அதன் பயன்பாடு குறித்து விளக்கினாா். சிறப்பு அழைப்பாளராக தருமபுரி மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் குணசேகரன் கலந்துகொண்டு, பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துதலின் நோக்கம், எலி கட்டுப்படுத்துதல் முறைகள் குறித்து விளக்கம் அளித்தாா். பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி வெண்ணிலா, பயிா்களில் ஒருங்கிணைந்த பூச்சி நிா்வாகம் மற்றும் இயற்கை முறையில் அவற்றைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தாா். பி.ஏ.எஸ்.எப். நிறுவனத்தின் விற்பனை அலுவலா்கள் தினேஷ், திருப்பதி ஆகியோா் பாதுகாப்பான முறையில் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துதல், விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள், பூச்சி மருந்தின் வகைகள், தெளிப்பான் வகைகள், பாதுகாப்பான உரையை அணிந்து வயலில் மருந்து தெளிக்கும் முறைகளை செயல்விளக்கமாக செய்து காண்பித்தனா்.

இதில், உதவி வேளாண்மை அலுவலா் கணேசன், உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் அருள்குமாா், கபிலன், உழவன் நண்பன் சேட்டு, 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா். வட்டார தொழில்நுட்ப மேலாளா் சிவசங்கரி நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com