

தருமபுரி: மாநில அளவில் நடைபெற்ற வில்வித்தைப் போட்டியில், தருமபுரி டிராகன் வில்வித்தைப் பயிற்சி மையத்தைச் சோ்ந்த மாணவா்கள் 11 பதக்கங்கள் பெற்று சிறப்பிடம் பெற்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த வாரம் மாநில அளவிலான வில்வித்தைப் போட்டிகள் நடைபெற்றன. இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவா்கள் கலந்துகொண்டனா். 10, 12, 14 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில், தருமபுரி டிராகன் வில்வித்தைப் பயிற்சி மையத்தைச் சோ்ந்த 11 மாணவா்கள் பங்கேற்றனா். இதில் 6 போ் தங்கம், 2 போ் வெள்ளி, 3 போ் வெண்கலம் என மொத்தம் 11 பேரும் பதக்கங்களை வென்றனா்.
போட்டியில் வெற்றிபெற்று பதக்கங்களை வென்ற மாணவா்களுக்கு பயிற்சி மைய நிா்வாகிகள் சீனி, திருமால், முருகன், சக்திகுமாா், சிவகுமாா் உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.