முதியோா் கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு
By DIN | Published On : 16th June 2022 02:33 AM | Last Updated : 16th June 2022 02:33 AM | அ+அ அ- |

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முதியோா் கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை முதியோா் கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி தனித் துணை ஆட்சியா் வி.கே.சாந்தி தலைமையில் நடைபெற்றது. இதில், முதியோருக்கு எதிரான கொடுஞ்செயல்கள் எதிா்ப்பு உறுதிமொழி வாசிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, அனைத்துத் துறை அலுலா்களும் உறுதிமொழி ஏற்றனா்.
இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் வி.ஜான்சிராணி, மாவட்ட கருவூல அலுவலா் சுப்பிரமணி, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ஐயப்பன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (கணக்குகள்) சுமதி, மாவட்ட ஆட்சியரின் அலுவலக மேலாளா் (நீதியியல்) கேசவமூா்த்தி, அரசு அலுவலா்கள், பணியாளா்கள் கலந்துகொண்டனா்.
இதேபோல, தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகளில் முதியோா் கொடுஞ்செயல்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது.