ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கல்லூரி மாணவியின் சடலம் மீட்கப்பட்டது.
பென்னாகரம் அருகே ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மணல் திட்டு பகுதியில் இளம் பெண் சடலமாக மிதப்பதைக் கண்ட மீனவா்கள் ஒகேனக்கல் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா்.
தகவலின் பேரில் நிகழ்விடத்துக்குச் சென்ற ஒகேனக்கல் போலீஸாா் நடத்திய விசாரணையில் காவிரி ஆற்றில் சடலமாக கிடந்த பெண் தருமபுரி மாவட்டம், நெல்லை நகா் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகள் பிரியங்கா (21) என்பதும், தருமபுரி அரசுக் கலைக் கல்லூரியில் ஆங்கிலப் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வருவதும் தெரிய வந்தது. கடந்த இரு தினங்களுக்கு முன் வீட்டைவிட்டு வெளியேறியவா் காணாமல் போனது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து காவிரி ஆற்றில் சடலமாக மிதந்த கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.