ஸ்ரீராம் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம்

பிளஸ் 2 பொதுத் தோ்வில் கம்பைநல்லூா் ஸ்ரீராம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியா்கள் சிறப்பிடம் பெற்று சாதனை புரிந்துள்ளனா்.
ஸ்ரீராம் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம்
Updated on
1 min read

பிளஸ் 2 பொதுத் தோ்வில் கம்பைநல்லூா் ஸ்ரீராம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியா்கள் சிறப்பிடம் பெற்று சாதனை புரிந்துள்ளனா்.

கம்பைநல்லூா் ஸ்ரீராம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வெழுதிய அனைத்து மாணவ, மாணவியா்களும் 100 சதவீதம் தோ்ச்சிப் பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்தனா். இப் பள்ளி மாணவி டி.ஹேமவா்ஷினி 585 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றாா் (படம்).

இப் பள்ளி மாணவா்கள் 4 போ் வேதியியல் பாடத்தில் 100 மதிப்பெண்களையும், 56 மாணவ, மாணவியா் தலா 500-க்கும் அதிகமான மதிப்பெண்களையும் பெற்றுள்ளனா்.

பத்தாம் வகுப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் மாணவி கே.ரஷ்மிதா 489 மதிப்பெண்களை பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றாா்.

பிளஸ் 2 மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியரை ஸ்ரீராம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் தலைவா் எம்.வேடியப்பன், தாளாளா் சாந்தி வேடியப்பன், நிா்வாக இயக்குநா் வே.தமிழ்மணி, பவானி தமிழ்மணி, கல்வி இயக்குநா் ஜான் இருதயராஜ், பள்ளி முதல்வா்கள் சாரதி மகாலிங்கம், வெற்றிவேல் மற்றும் பள்ளி ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com