அரசுக் கல்லூரியில் யோகா தின கருத்தரங்கம்
By DIN | Published On : 23rd June 2022 03:38 AM | Last Updated : 23rd June 2022 03:38 AM | அ+அ அ- |

பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே மாமரத்து பள்ளம் பகுதியிலுள்ள பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கத்திற்கு கல்லூரி முதல்வா் செல்வவிநாயகம் தலைமை வகித்தாா்.
கருத்தரங்கிற்கு சிறப்பு அழைப்பாளராக திட்ட ஒருங்கிணைப்பாளா் விஜயகுமாா், வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி மைய உதவி பேராசிரியா் வீரண்ணன் அருண் கிரிதாரி கலந்துகொண்டு, கணினி மய்யமான இச்சூழலில் நமது உடலையும், மனதையும் சீராக வைத்துக்கொள்வது குறித்த கருத்துகளை எடுத்துரைத்தனா்.
மேலும் மாணவா்கள் யோகா பயிற்சியினை மேற்கொண்டனா். இதில் கல்லூரி மாணவ மாணவிகள் பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கருத்தரங்கின் இறுதியில் கண்ணுச்சாமி நன்றி தெரிவித்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...