தருமபுரி புத்தகத் திருவிழாவில் 13 நூல்கள் வெளியீடு
By DIN | Published On : 26th June 2022 11:15 PM | Last Updated : 26th June 2022 11:15 PM | அ+அ அ- |

தருமபுரி புத்தகத் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை 13 நூல்கள் வெளியிடப்பட்டன.
தகடூா் புத்தகப் பேரவை, தருமபுரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் தருமபுரி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்த திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்வில் 10 நூலாசிரியா்கள் எழுதிய 13 நூல்களின் வெளியீடும் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியும் உலகத் தமிழ் பண்பாட்டுச் சங்க கௌரவத் தலைவா் பா.இளங்கோ தலைமையில் நடைபெற்றது.
தருமபுரி படைப்பாளா், பதிப்பாளா் சங்கத் தலைவா் சி.சரவணன் வரவேற்றாா். தகடூா் புத்தகப் பேரவைத் தலைவா் இரா.சிசுபாலன், ஒருங்கிணைப்பாளா் இ.தங்கமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தருமபுரி மாவட்ட படைப்பாளா் பதிப்பாளா் சங்கச் செயலாளா் மா.பழனி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா்.
தகடூா் புத்தகப் பேரவைச் செயலாளா் இரா.செந்தில் நூல்களை வெளியிட்டு பேசினாா்.
இதில், பா எழுத பயில்வோம், நீலகிரியாா், ‘இருக்கட்டும் இலக்கு விடியட்டும் கிழக்கு’, இருளுக்குள் ஒளிரும் விடியல், ஆதி முதல் அந்தம் வரை, கைப்பிடித்த கண்ணாளா, கை சேராயோ கனவே, காதலெனும் நெடு வனத்தில், மூன்றடி திருக்கு, கொலைகார நிலவு, பிரியாவின் கவிதைகள், கத்திரிக்காய் சாம்பாா் ஆகிய நூல்கள் வெளியிட்டு அறிமுகப்படுத்தப்பட்டன.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G