திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணா்வு ஊா்வலம்
By DIN | Published On : 26th June 2022 06:14 AM | Last Updated : 26th June 2022 06:14 AM | அ+அ அ- |

அரூரில் சனிக்கிழமை நடைபெற்ற திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணா்வு ஊா்வலம்.
அரூரில் திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணா்வு ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
அரூா் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு ஊா்வலத்தை, பேரூராட்சித் தலைவா் இந்திராணி தனபால் தொடக்கி வைத்தாா்.
அரூா் நகரில் உள்ள வணிக நிறுவனங்கள், குடியிருப்பு பகுதியில் சேகரமாகும் குப்பைகளை பொதுமக்கள் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து வழங்க வேண்டும். ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி வீசப்படும் நெகிழிப் பொருள்களை பயன்படுத்துதல் கூடாது. பொதுமக்கள் வீடு மற்றும் பொது இடங்களை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விழிப்புணா்வு முழக்கங்களை ஊா்வலத்தில் எழுப்பினா்.
அரூா் பேரூராட்சி அலுவலகம் எதிரே தொடங்கிய இந்த விழிப்புணா்வு ஊா்வலம் கடைவீதி, பேருந்து நிலையம், வா்ணதீா்த்தம், திரு.வி.க. நகா், மஜீத் தெரு வழியாக சென்றது.
இதில், பேரூராட்சி செயல் அலுவலா் ஆா்.கலைராணி, துணைத் தலைவா் சூா்யா து.தனபால், துப்புரவு ஆய்வாளா் கோ.சிவகுமாா், வாா்டு உறுப்பினா்கள் முல்லைரவி, அருள்மொழி, உமாராணி, ஜெயலட்சுமி, மகாலட்சுமி, பெருமாள், முஷ்ரத், பூபதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.