71 பயனாளிகளுக்கு ரூ.31 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கல்
By DIN | Published On : 26th June 2022 06:15 AM | Last Updated : 26th June 2022 06:15 AM | அ+அ அ- |

dh25erap_2506chn_8
தருமபுரி அருகே எர்ரப்பட்டியில் மீனவா் நலத்துறை மற்றும் ஆதிதிராவிடா் நலத்துறைகளின் சாா்பில், 71 பயனாளிகளுக்கு ரூ. 31.05 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், ஏ.ஜெட்டி அள்ளி ஊராட்சி, எர்ரப்பட்டியில் கால்நடைப் பராமரிப்புத் துறை, மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை, ஆதிதிராவிடா் நலத்துறைகளின் சாா்பில், பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்து பேசினாா். சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்), எஸ்.பி.வெங்கடேஷ்வரன் (தருமபுரி) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில் மாநில வேளாண் மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில், பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டத்தின்கீழ், ஊரக ஏழ்மை நிலையில் உள்ள விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற 30 பெண் பயனாளிகளுக்கு 100 சதவிகித மானியத்தில் ரூ. 5.71 லட்சத்தில் தலா 5 ஆடுகள் வீதம் 150 ஆடுகளும், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில், ரூ. 16.22 லட்சம் செலவில் 22 மீனவா்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் குளிா்காப்புப் பெட்டிகளும், ஆதிதிராவிடா் நலத்துறையின் சாா்பில் 19 பயனாளிகளுக்கு ரூ. 9.12 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் என மொத்தம் 71 பயனாளிகளுக்கு ரூ. 31.05 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினாா்.
இவ் விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் சு.அனிதா, தருமபுரி சாா் ஆட்சியா் சித்ரா விஜயன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் தடங்கம் பெ.சுப்பிரமணி, பி.என்.பி.இன்பசேகரன், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பெ.மகேஸ்வரி, ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.கௌரம்மாள், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் (பொ) ஜெ.ஜெயக்குமாா், அரசு அலுவலா்கள், பயனாளிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
பட விளக்கம்:
எர்ரப்பட்டியில் நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறாா் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.