மாவட்ட காவல் அலுவலககட்டுமானப் பணிகள் ஆய்வு
By DIN | Published On : 17th March 2022 11:50 PM | Last Updated : 17th March 2022 11:50 PM | அ+அ அ- |

தருமபுரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாவட்ட காவல் அலுவலக கட்டுமானப் பணிகளை, காவலா் வீட்டு வசதிக் கழகத் தலைவா் ஏ.கே.விஸ்வாதன் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
தருமபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் தற்போதுள்ள அலுவலகத்தின் பின்புறத்தில் அனைத்து காவல் அலுவலகங்களும் ஒரே இடத்தில் செயல்படும் வகையில், புதிதாக மாவட்ட காவல் அலுவலகம் கட்டும் பணி நடைபெற்றது வருகிறது.
இந்தக் கட்டுமானப் பணிகளை தமிழக காவல் துறையின் காவலா் வீட்டு வசதிக் கழகத் தலைவரும் காவல் துறை தலைமை இயக்குநருமான ஏ.கே.விஸ்வநாதன் நேரில் பாா்வையிட்டு கட்டுமானப் பணிகள் குறித்து விவரங்களை கேட்டறிந்தாா்.
இதைத் தொடா்ந்து, தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் காவல் அலுவலா்களுக்கு குடியிருப்பு கட்ட தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின் போது, தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.கலைச்செல்வன், காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், பொறியாளா்கள் உடனிருந்தனா்.