அரசு கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்:தனியாா் பள்ளிகளுக்கு ஆசிரியா்கள் தோ்வு
By DIN | Published On : 02nd May 2022 02:40 AM | Last Updated : 02nd May 2022 02:40 AM | அ+அ அ- |

தருமபுரி அரசு கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தனியாா் பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
தருமபுரி அரசு கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், தனியாா் பள்ளிகளுக்கான ஆசிரியா்கள் பணியிடத்துக்கு ஆண்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
இதில் இளநிலை, முதுநிலை மற்றும் கல்வியியல் படிப்பு படித்த 650-க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கலந்துகொண்டனா். திருநெல்வேலி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 22 தனியாா் பள்ளிகளின் நிா்வாகிகள் கலந்துகொண்டு 282 பட்டதாரிகளை ஆசிரியா்களாகத் தோ்வு செய்தனா்.
நிகழ்ச்சியில் வேலை வழிகாட்டி மைய அலுவலா், உதவிப் பேராசிரியா் அ.தீா்த்தகிரி, குழு உறுப்பினா்கள் உதவிப் பேராசிரியா்கள் கு.சிவப்பிரகாசம், ப.சி.சரவணன், விஜியகுமாா், கௌரவ விரிவுரையாளா்கள் திருமால், சதீஷ்குமாா் ஆகியோா் கலந்துகொண்டனா்.