தருமபுரி நகராட்சி நிா்வாகம் சாா்பில் மே தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
இவ் விழாவுக்கு நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது தலைமை வகித்தாா். நகா்மன்றத் துணைத் தலைவா் நித்யா அன்பழகன், நகராட்சி ஆணையா் சித்ரா சுகுமாா் ஆகியோா் பேசினாா். விழாவில் தூய்மை பணியாளா்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன. சிறப்பான முறையில் பணிபுரிந்த நகராட்சி அலுவலா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டு சான்றிதழ், நினைவுப் பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டனா். விழாவில் நகராட்சி மேலாளா் விஜயா, அலுவலா்கள், நகா்மன்ற உறுப்பினா்கள், தூய்மைப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.