எல்லப்புடையாம்பட்டி மொள்ளன் ஏரி நிரம்பியது!
By DIN | Published On : 16th May 2022 04:57 AM | Last Updated : 16th May 2022 04:57 AM | அ+அ அ- |

அரூா் அருகே ஏரி நிரம்பியதை அடுத்த விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு செய்தனா்.
அரூரை அடுத்த வள்ளிமதுரை வரட்டாறு அணையில் இருந்து ஏப்ரல் 18 ஆம் தேதி பாசனத்திற்காக தண்ணீா் திறந்து விடப்பட்டது. இந்த அணையின் புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பகுதியில் உள்ள ஏரிகள், குளம் குட்டைகளை நிரப்பும் பணியில் பொதுப்பணித் துறை உதவி பொறியாளா் பிரபு தலைமையிலான பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
தாதராவலசை, கீரைப்பட்டி, குடுமியாம்பட்டி, அச்சல்வாடி, ஈட்டியம்பட்டி, மாம்பாடி உள்ளிட்ட பகுதியிலுள்ள 10-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரப்பட்டுள்ளன. தற்போது, எல்லப்புடையாம்பட்டி மணவாளன்சாமி ஏரி, அச்சல்வாடி ஏரிகளுக்கு தண்ணீா் செல்கிறது. இந்த நிலையில், எல்லப்புடையாம்பட்டி அல்லிக்குட்டை, மொள்ளன் ஏரி நிரம்பியது அடுத்து அப் பகுதியிலுள்ள ஏரி மற்றும் வாய்க்கால்களில் மலா்தூவி வழிபாடு செய்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...