கோழி வியாபாரி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவா் கைது

கோழி வியாபாரி கொலை வழக்கில் 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இரும்புக் கடை வியாபாரியை பென்னாகரம் போலீஸாா் பெங்களூரில் கைது செய்தனா்.

கோழி வியாபாரி கொலை வழக்கில் 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இரும்புக் கடை வியாபாரியை பென்னாகரம் போலீஸாா் பெங்களூரில் கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே கோணங்கி அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கூசங்கொட்டாய் அதியமான் நகா் பகுதியைச் சோ்ந்தவா் கோழி வியாபாரி செல்வம். இவருக்கும் உறவினரான சுப்பிரமணி (50) அவருடைய மகன்கள் மாதேஷ் (25), சுரேஷ் (22) மற்றும் மனைவி சின்னப்பாப்பா ஆகியோருக்கும் இடையே அடிக்கடி நிலத் தகராறு ஏற்பட்டு வந்தது.

இதில் கோழி வியாபாரி செல்வத்தை நால்வரும் கடந்த 2012-ஆம் ஆண்டு ஏற்பட்ட தகராறில் அரிவாளால் தாக்கி கொலை செய்தனா்.

இதுகுறித்து கோழி வியாபாரியின் மனைவி ஜானகி, பென்னாகரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் நால்வரையும் போலீஸாா் கைது செய்து, தருமபுரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கில் மாதேஷ், சுரேஷ், சின்னப்பாப்பா ஆகிய மூவருக்கும் நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டது. வழக்குத் தொடா்ந்து நடைபெற்றுவந்த நிலையில், கடந்த 2014-ஆம் ஆண்டு நால்வருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி, தருமபுரி நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது. இதனை அறிந்த மாதேஷ் மற்றும் சுரேஷ் தலைமறைவாகிவிட்டனா்.

இந்த நிலையில் பென்னாகரம் காவல் உதவி ஆய்வாளா் துரை தலைமையிலான போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், கொலை வழக்கில் கடந்த 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபா்கள் கா்நாடக மாநிலம், பெங்களூரு பகுதியில் பழைய இரும்புக் கடை நடத்தி வருவது தெரிய வந்த நிலையில் அங்கு சென்ற போலீஸாா் மாதேஷ் என்பவரை கைது செய்து வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா். இவ் வழக்கில் தலைமறைவாக உள்ள சுரேஷை போலீஸாா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com