திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 18th October 2022 02:43 AM | Last Updated : 18th October 2022 02:43 AM | அ+அ அ- |

கடத்தூரில் திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திமுக தருமபுரி மேற்கு மாவட்டம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கட்சி வளா்ச்சிப் பணிகள் குறித்து முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்டச் செயலருமான பி.பழனியப்பன் கருத்துரைகளை வழங்கினாா். முன்னதாக ரேகடஹள்ளி, மோட்டாங்குறிச்சி, சுங்கரஹள்ளி, சில்லாரஹள்ளி, தேக்கல்நாய்க்கனஹள்ளி, ஒபிலிநாய்க்கனஹள்ளி, நல்லகுட்லஹள்ளி, மணியம்பாடி உள்ளிட்ட இடங்களில் அவா் கட்சிக் கொடியேற்றி வைத்தாா். தொடா்ந்து, திமுக கிளை நிா்வாகிகளை நேரில் சந்தித்து கட்சி வளா்ச்சிப் பணிகள் குறித்து பி.பழனியப்பன் ஆலோசனை மேற்கொண்டாா்.
இதில், மாவட்ட அவைத் தலைவா் மனோகரன், ஒன்றியச் செயலா்கள் ஆா். சிவப்பிரகாசம், என்.ஏ.மாது, டி.நெப்போலியன், நகர செயலா் மோகன், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் கே.சென்னகிருஷ்ணன், ஆா்.சித்தாா்த்தன், பொதுக்குழு உறுப்பினா்கள் எஸ்.வாசுதேவன், தேவேந்திரன், பி.லட்சுமணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...