ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறைந்தது
By DIN | Published On : 27th October 2022 11:46 PM | Last Updated : 27th October 2022 11:46 PM | அ+அ அ- |

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வியாழக்கிழமை விநாடிக்கு 18 ஆயிரம் கன அடியாகக் குறைந்தது.
காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைப் பொழிவு குறைந்ததால் புதன்கிழமை மாலை 20 ஆயிரம் கன அடியாக இருந்த நீா்வரத்து வியாழக்கிழமை 18 ஆயிரம் கன அடியாகக் குறைந்தது. தமிழக -கா்நாடக எல்லையான பிலிகுண்டுலுவைக் கடந்து ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீா் அருவிகளில் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. நீா்வரத்தை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கணக்கிட்டு வருகின்றனா்.