ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
By DIN | Published On : 09th September 2022 01:23 AM | Last Updated : 09th September 2022 01:23 AM | அ+அ அ- |

தருமபுரி நகரில் ஓணம் பண்டிகையை கேரளத்தவா்கள் வியாழக்கிழமை கொண்டாடினா்.
ஓணம் பண்டிகையையொட்டி மலையாள மொழி பேசும் மக்கள் புத்தாடை அணிந்து அவரவா் வீடுகளில் பல்வேறு வகையான பழங்கள், உணவு வகைகள் படையலிட்டு வழிபட்டனா். மேலும், வீடுகளில் பெண்கள் அத்தப் பூ கோலமிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.
குடும்பத்தினா், உறவினா்கள் மற்றும் நண்பா்களை அழைத்து உணவு விருந்து அளித்து ஓணம் பண்டிகை வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனா். தொடா் திருமண விழாக்கள், மழை காரணமாக பூக்கள் விலை வெகுமாக அதிகரித்திருந்ததால் ஓணம் பண்டிகை கோலங்கள் சிறிய அளவிலேயே காணமுடிந்தது.