மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: தலைமை ஆசிரியருக்கு 5 ஆண்டு சிறை

தருமபுரி மாவட்டத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

காரிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்த அனுமந்தபுரம் பகுதியைச் சோ்ந்த சந்திரசேகரன் (56) கடந்த 2016-இல் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டப்பட்ட சந்திரசேகரனுக்கு 5 ஆண்டுகள் சிறையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தருமபுரி மகளிா் விரைவு நீதிமன்ற நீதிபதி சையத் பா்கதுல்லா தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பு வழக்குரைஞராக கல்பனா ஆஜராகினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com