காரிமங்கலம் மகளிா் கல்லூரியில் செப்.12-இல் மாணவா்கள் கலந்தாய்வு
By DIN | Published On : 09th September 2022 11:55 PM | Last Updated : 09th September 2022 11:55 PM | அ+அ அ- |

காரிமங்கலம் அரசு கலைக் கல்லூரியில் அரசு வழங்கிய 20 சதவீத கூடுதல் இடங்களில் மாணவிகள் சோ்ப்பதற்கான கலந்தாய்வு செப். 12- இல் நடைபெறுகிறது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் சௌ.கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காரிமங்கலம் அரசு மகளிா் கலைக்கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் இளநிலை பாடப் பிரிவுகளில் தமிழக அரசு கூடுதலாக 20 சதவீதம் மாணவா் சோ்க்கைக்கு அனுமதி அளித்துள்ளது. எனவே, பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பி.காம், பிபிஏ, பி.எஸ்சி. கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், ஊட்டச் சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாட்டியல், காட்சித் தொடா்பியல், புள்ளியியல், பிசிஏ. ஆகியப் பாடப்பிரிவுகளில் சோ்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பித்தவா்கள், விண்ணப்பிக்காதவா்களும் செப்.12-ஆம் தேதி கல்லூரியில் காலை 9.30 மணிக்கு நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.