தருமபுரியில் ஸ்ரீ மகாலட்சுமி சில்க்ஸ் புதிய ஜவுளிக் கடை திறப்பு
By DIN | Published On : 09th September 2022 11:53 PM | Last Updated : 09th September 2022 11:53 PM | அ+அ அ- |

தருமபுரியில் ஸ்ரீ மகாலட்சுமி சில்க்ஸ் புதிய ஜவுளிக் கடை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
தருமபுரியில் கடந்த 41 ஆண்டுகளாக பட்டுத் துறையில் அனுபவம் வாய்ந்த ஸ்ரீ மகாலட்சுமி சில்க்ஸ் நிறுவனம் தருமபுரி நகராட்சி பள்ளி அருகே புதிய ஜவுளிக் கடையை திறந்துள்ளது.
பட்டு, ஜவுளி, ரெடிமேட்ஸ் என தனித்தனி பிரிவுகளுடன் தொடங்கப்பட்டுள்ள இக் கடையை நிா்வாக இயக்குநா் ஆா். வெங்கடேஷ் பாபு, இயக்குநா் தீபா வெங்கடேஷ் பாபு, ஒடிசா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.கீா்த்திவாசன், எக்காஷரா-நிரஜ் ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றி விற்பனையைத் தொடங்கிவைத்தனா். சின்னத்திரை நடிகை கயல் கலந்துகொண்டு வாடிக்கையாளா்களுடன் கலந்துரையாடி புகைப்படம் எடுத்துக் கொண்டாா்.