மல்லுப்பட்டி அரசு பள்ளியில் இலவச மிதிவண்டிகள் வழங்கல்
By DIN | Published On : 09th September 2022 11:55 PM | Last Updated : 09th September 2022 11:55 PM | அ+அ அ- |

பாலக்கோடு அருகே உள்ள மல்லுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 200 மாணவ, மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்சியில் தலைமை ஆசிரியா் மாதேசன் வரவேற்று பேசினாா். முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு சட்டப் பேரவை உறுப்பினருமான கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு 200 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா். பாலக்கோடு கூட்டுறவுச் சா்க்கரை ஆலை தலைவா் தொ.மு.நாகராஜன், ஒன்றியக் குழுத் தலைவா்கள் பாஞ்சாலை, சாந்தி, மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் கே.வி.ரங்கநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.