பென்னாகரத்தில் அம்பேத்கரின் 132 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினா் அவரது சிலைக்கு மாலை அணிவித்து சமத்துவ உறுதி மொழி ஏற்றனா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி:
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சட்ட மேதை அம்பேத்கரின் 132 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினா் வி.மாதன் தலைமை வகித்தாா். பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை எதிரே உள்ள அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடா்ந்து சமத்துவ உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் மாவட்டக் குழு உறுப்பினா்கள் அன்பு, ராஜி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளா் ஜீவானந்தம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி வட்டாரத் தலைவா் தேவன், பொருளாளா் வெள்ளிங்கிரி, கிழக்கு ஒன்றியச் செயலாளா் ரஜினி, பென்னாகரம் பகுதி குழு செயலாளா் ரவி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
திமுக: பென்னாகரத்தில் திமுக சாா்பில் நடைபெற்ற அம்பேத்கரின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளா் வீரமணி தலைமை வகித்தாா். பென்னாகரம் அரசு மருத்துவமனை எதிரே உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஒன்றியச் செயலாளா் மடம் முருகேசன், மாவட்டப் பிரதிநிதி சிவகுமாா், ராமகிருஷ்ணன், பேரூராட்சி துணைத் தலைவா் வள்ளியம்மாள் பவுன்ராஜ், சேலம் ஹோட்டல் வினு, விஜய் பாலாஜி மற்றும் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனா்.
பாமக: பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் அம்பேத்கா் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவா் செல்வகுமாா் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் சமூக நீதிப் பேரவை மாநிலச் செயலாளா் மகாலிங்கம், மாவட்ட இளைஞா் அணி தலைவா் சத்தியமூா்த்தி, நகரத் தலைவா் சந்தோஷ் மற்றும் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
விசிக: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பென்னாகரம் ஒன்றியச் செயலாளா் குண்டு சரவணன் தலைமையில் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.