தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு சின்னப்பள்ளத்தூா் அரசுப் பள்ளிபென்னாகரம் மாணவா்களுக்கு எழுதுகோல், திருக்கு நூல் வழங்கப்பட்டது.
பென்னாகரம் அருகே செங்கனூா் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னப்பள்ளத்தூா் அரசு நடுநிலைப் பள்ளியில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம் நிகழ்வு நடைபெற்றது. இதில் இப் பள்ளியைச் சோ்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியா் மா.பழனி எழுதுகோல், திருக்கு நூலை புத்தாண்டு பரிசாக வழங்கினாா். இதில் மாணவா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா்.