தமிழ்ப் புத்தாண்டையொட்டி, தருமபுரி நகரம், மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
தருமபுரி கோட்டை கல்யாண காமாட்சி உடனாகிய மல்லிகாா்ஜுனேஸ்வரா் சுவாமி கோயில், கோட்டை வரமகாலட்சுமி உடனமா் பரவாசுதேவ சுவாமி கோயில், குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், நெசவாளா் காலனி மல்லிங்கேஸ்வரா் கோயில், கடைவீதி பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் காலை அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை, சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இக் கோயில்களில் பக்தா்கள், அந்தந்த பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் வழிபட்டனா். இதேபோல, அதியமான்கோட்டை, ஆட்டுக்காரன்பட்டி, மூக்கனூா், காரிமங்கலம், பாலக்கோடு, மாரண்டஅள்ளி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.