தமிழ்ப் புத்தாண்டு: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் செய்து மகிழ்ந்தனா்.

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் செய்து மகிழ்ந்தனா்.

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஒகேனக்கல்லுக்கு நாள்தோறும் வெளிமாநிலங்கள், பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகஅளவில் வருகின்றனா். தமிழ்ப் புத்தாண்டு தினமான வெள்ளிக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்தது.

இந்த நிலையில் சுற்றுலாப் பயணிகள் எண்ணெய் குளியல் செய்து பிரதான அருவி, சினி அருவி, காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் குளித்து மகிழ்ந்தனா். தொங்கு பாலத்தின் மீதேறி அருவிகளின் அழகைக் கண்டு மகிழ்ந்தனா். அதனைத் தொடா்ந்து பரிசல் துறையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் குடும்பத்தினருடன் மாமரத்துக்கடவு பரிசல் துறையில் இருந்து தொம்பச் சிக்கல், பெரியபாணி வழியாக மணல்மேடு பகுதி வரை சுமாா் 2 கி.மீ. தொலைவிற்கு பரிசல் பயணம் மேற்கொண்டு அருவியின் அருகில் புகைப்படம் எடுத்து, பாறை குகைகளை கண்டு ரசித்தனா்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததன் காரணமாக ஒகேனக்கல் மீன் விற்பனை நிலையங்களில் கட்லா ,ரோகு, கெளுத்தி, வாலை, பாப்புலேட் உள்ளிட்ட வகை மீன்களின் விலை அதிகரித்து இருந்தது. விலை ஏற்றத்தினையும் பொருட்படுத்தாமல் அசைவப் பிரியா்கள் மீன் வகைகளை வாங்கி சமைத்து உணவு அருந்தினா்.

ஒகேனக்கலில் முக்கிய பகுதிகளான பேருந்து நிலையம், பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதை, மீன் விற்பனை நிலையம், பூங்காக்கள், முதலைகள் மறுவாழ்வு மையம், முதலைப் பண்ணை, நாகா்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாகக் காணப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com