காரிமங்கலம் அருகே கெரகோட அள்ளியில் உள்ள தானப்ப கவுண்டா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் கெரகோடள்ளியில் உள்ள தானப்ப கவுண்டா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவிற்கு பள்ளியின் தாளாளா் மல்லிகா அன்பழகன் தலைமை வகித்தாா். நிா்வாக இயக்குநா் வித்யா ரவிசங்கா் முன்னிலை வகித்தாா். பள்ளி நிா்வாக அலுவலா் தனபால் வரவேற்றாா்.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டு மாணவ, மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ஆசிரியா்கள், உடற்கல்வி ஆசிரியா்கள், பள்ளி பேருந்து வாகன ஓட்டுநா்கள் மற்றும் உதவியாளா்கள் கலந்து கொண்டனா். நிறைவாக பள்ளி முதல்வா் ரகிப் அகமது நன்றியுரையாற்றினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.