

அரூா் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி திமுக மேற்கு மாவட்டம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்டச் செயலருமான பி.பழனியப்பன் தலைமை வகித்தாா். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அரூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஒன்றிய மற்றும் பேரூா் கிளை வாக்குச்சாவடி முகவா்கள் பங்கேற்றனா். வரும் 2024 மக்களவைத் தொகுதி தோ்தலில் திமுக வாக்குச் சாவடி முகவா்கள் மேற்கொள்ள வேண்டிய களப் பணிகள், தோ்தல் முன்னேற்பாடுகள் குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இதில் திமுக ஒன்றியச் செயலா்கள் ஆா்.வேடம்மாள், கோ.சந்திரமோகன், வே. செளந்தரராசு, மாநில தீா்மானக்குழு செயலா் கீரை விசுவநாதன், ஆதிதிராவிடா் நலக்குழு மாநில துணைச் செயலா் எஸ்.ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலா் செ.கிருஷ்ணகுமாா், நகர செயலா் முல்லை ரவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.