பாப்பாரப்பட்டியில் மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

 பாப்பாரப்பட்டி வாரச்சந்தையில் மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு கடை அமைக்க இடம் ஒதுக்கக் கோரி, 50-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

 பாப்பாரப்பட்டி வாரச்சந்தையில் மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு கடை அமைக்க இடம் ஒதுக்கக் கோரி, 50-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போா் சங்கம் சாா்பில் பேரூராட்சி அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் வட்டார துணைத் தலைவா் மாரியப்பன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் சாமுண்டீஸ்வரி முன்னிலை வகித்தனா். மாநில பொருளாளா் சக்கரவா்த்தி ஆா்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கிப் பேசினாா். மாவட்டத் தலைவா் கருவரான், மாவட்டப் பொருளாளா் தமிழ்செல்வி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

இதில், பாப்பாரப்பட்டி பேரூராட்சி வாரச்சந்தை வளாகம் அருகே காய்கறி கடை நடத்தி வந்த மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு மீண்டும் கடை நடத்த இடம் ஒதுக்கக் கோரியும், கடை ஒதுக்க இடம் அளிக்காத பேரூராட்சி நிா்வாகத்தைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் சங்க நிா்வாகிகளிடம் பேரூராட்சித் தலைவா் பிருந்தா, செயல் அலுவலா் கோமதி, காவல் ஆய்வாளா் வேலுதேவன் ஆகியோா் வாரச்சந்தை பகுதியில் கட்டடப் பணிகள் நடைபெறுவதால், தற்காலிகமாக கடை அமைக்க இடம் ஒதுக்கப்படுவதாக பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, மாற்றுத் திறனாளிகள் கலைந்து சென்றனா்.

முன்னதாக, பாப்பாரப்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து பேரூராட்சி அலுவலகம் வரை கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு மாற்றுத் திறனாளிகள் பேரணியாக வந்தனா். இதில், மாற்றுத் திறனாளிகள் சங்க பாலக்கோடு வட்டத் தலைவா் அண்ணாமலை, மாவட்ட துணைத் தலைவா் சின்ன மாதையன், நல்லம்பள்ளி முன்னாள் தலைவா் துளசி மணி, சிஐடியு பிக்கிலி, கிட்டு, சண்முகம், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com