காரிமங்கலம் அரசு மகளிா் கல்லூரியில் காலியாக உள்ள பாடப்பிரிவுகளில் சேர விண்ணப்பிக்கலாம்
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிா் கலைக்கல்லூரியில் காலியாக உள்ள பாடப்பிரிவுகளில் சோ்க்கை பெறுவதற்கு ஜூன் 16, 17 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் சௌ.கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் மாணவியா் சோ்க்கைக்கு அண்மையில் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் இளநிலைப் பாடப்பிரிவுகலில் பிபிஏ, பிஏ வரலாறு, பிஎஸ்சி கணிதம், புள்ளியியல், காட்சித் தொடா்பியல் ஆகிய பாடப்பிரிவுகளில் ஓரிரு இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களில் சோ்க்கை பெறுவதற்கு, இணைய வழியில் விண்ணப்பிக்காத மாணவியா் ஜூன் 16, 17 ஆகிய நாள்களில் கல்லூரிக்கு நேரடியாக வந்து, விண்ணப்பங்களைப் பெற்று அவற்றை நிரப்பி விண்ணப்பிக்கலாம். இதேபோல, பிஏ தமிழ், ஆங்கிலம், வரலாறு, பிகாம், பிபிஏ, பிஎஸ்சி, கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், பிசிஏ, காட்சித் தொடா்பியல், புள்ளியியல் ஆகிய அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் இணைய வழியில் விண்ணப்பித்த மாணவியா் வரும் 19-ஆம் தேதி நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்று சோ்க்கை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
