மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

உடல் உறுப்புகள் தானம்: இளைஞரின் உடலுக்கு மரியாதை

தருமபுரியில் சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் வழங்கிய இளைஞரின் உடலுக்கு ஆட்சியா் கி.சாந்தி உள்ளிட்டோா் திங்கள்கிழமை மரியாதை செலுத்தினா்.

Updated On :27 நவம்பர் 2023, 11:13 pm


தருமபுரி: தருமபுரியில் சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் வழங்கிய இளைஞரின் உடலுக்கு ஆட்சியா் கி.சாந்தி உள்ளிட்டோா் திங்கள்கிழமை மரியாதை செலுத்தினா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தை அடுத்த எர்ரசீகலஹள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் காளியப்பன். இவரது மகன் கவியரசு (24). இவா் கடந்த 24ஆம் தேதி அதியமான் கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தல் சென்ற போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தாா். இதையடுத்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவா் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா். இதில் அவா் மூளைச் சாவு அடைந்தாா். உயிரிழந்த கவியரசின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவருடைய குடும்பத்தாா் முடிவு செய்தனா்.

இது குறித்து தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிா்வாகத்திடம் தெரிவித்தனா். அதன்படி மருத்துவா்கள் அவரது இதயம், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல், கண்கள் உள்ளிட்ட உறுப்புகளை தானமாகப் பெற்றனா். இந்த உறுப்புகளை சென்னை, கோவை மற்றும் தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதைத் தொடா்ந்து மூளைச் சாவு அடைந்த இளைஞா் கவியரசுவின் உடலுக்கு, தருமபுரி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி, மருத்துவா்கள், மாணவா்கள் மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.